அரசியலில் நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை: பன்னீர்செல்வம்

சென்னை:முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின், ''அரசியலில் நண்பர்களும் இல்லை; எதிரிகளும் இல்லை,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று காலை சென்னை அடையாறில் நடைபயிற்சி சென்றபோது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து, 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' உயர்நிலை கூட்டத்தில் பங்கேற்றார். அதில், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவது என முடிவெடுக்கப்பட்டது.
அதை அறிவித்த சில மணி நேரங்களில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு பன்னீர்செல்வம் சென்றார்.
அவரை வாசலில் நின்று, அழைத்து சென்றார் துணை முதல்வர் உதயநிதி. முதல்வருடன் 40 நிமிடங்கள் சந்திப்பு நீடித்தது.
பின், பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:
மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பியுள்ளார். உடல்நலம் குறித்து விசாரிக்க, வீடு தேடிச் சென்று சந்தித்தேன். கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தேன். சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை.
ஜெயலலிதாவின் நேரடி பார்வையில், 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்; எனக்கு அனைத்தும் தெரியும். அரசியலில் எனக்கென்று தனி மரியாதை உள்ளது. பா.ஜ., தலைவர்கள் சமீபத்தில் என்னை சந்திக்கவில்லை.
மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை எனக் கூறி, தமிழகத்திற்கான கல்வி நிதியை தர மறுக்கும் மத்திய அரசின் செயல் சரியல்ல. அதனால், மத்திய அரசை விமர்சிக்கிறேன்.
ச ட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்திருக்கும் பழனிசாமிக்கு வாழ்த்துகள். த.வெ.க.,வுட னான கூட்டணிக்காக விஜய் என்னிடம் பேசவி ல்லை; நானும் அவரிடம் பேசவில்லை.
எதிர்காலத்தில் தி.மு.க., வுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா அல்லது ஜெயலலிதா கூறியதுபோல தி.மு.க.,வை தீய சக்தியாகத்தான் பார்க்கிறீர்களா என்று கேட்கிறீர்கள்.
அரசியலில் நண்பர்களும் இல்லை; எதிரிகளும் இல்லை என்பது தான் கடந்த கால வரலாறு. தேர்தல் நெருக்கத்தில் எதுவும் நடக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.










மேலும்
-
தசராவுக்கான கஜ பயண ஏற்பாடுகள் தீவிரம்
-
ஆடிப்பெருக்கில் அட்டகாச பரிசு தங்கமயில் ஜூவல்லரி அறிவிப்பு
-
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு தடை
-
விகாஸ் குமார் விகாஸ் ஐ.பி.எஸ்., சஸ்பெண்ட் உத்தரவும் ரத்து
-
100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
-
'மாஜி' அமைச்சரின் மகன், மகளுக்கான சிறை தண்டனையை நிறுத்திய உத்தரவு ரத்து