வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு

சென்னை: 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலை ரூ.34.50 காசுகள் குறைந்து, ரூ.1789க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கின்றன.
இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாளன்று, உள்நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் விலையை மாற்றுகின்றன.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலை ரூ.34.50 காசுகள் குறைந்து உள்ளது. கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் ரூ.1,823க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாதம், அந்த சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல், அதே விலையே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது




மேலும்
-
அன்புமணியின் 2ம் கட்ட பயணம் ஆக.7ல் துவக்கம்; 9ல் பொதுக்குழு
-
தலைமை அலுவலகம்: ராமதாஸ்-அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்
-
முன்னாள் அமைச்சர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
-
சீன ராணுவம் 98வது ஆண்டு கொண்டாட்டம்
-
பொதுச்செயலர் ஆனதற்கு எதிராக வழக்கு நிராகரிக்க கோரிய பழனிசாமி மனு தள்ளுபடி
-
பள்ளி சீருடையில் மாணவர்கள் புகைபிடிக்கும் அதிர்ச்சி வீடியோ