ஆஸ்திக சமாஜத்தின் சார்பில் ஸ்ரீ மஹா ருத்ரம் நாம சங்கீர்த்தனம் துவக்கம்

கோவை:
ஆஸ்திக சமாஜம் சார்பில், 26வது ஆண்டு நாம சங்கீர்த்தன வைபவம் மற்றும் ஸ்ரீ மஹாருத்ரம், வள்ளி சீதா கல்யாண மஹோத்ஸவம் தடாகம் சாலை இடையர்பாளையம் வி.ஆர்.ஜி.,திருமணமண்டபத்தில் நேற்று துவங்கியது.

உலகநலன் கருதியும் மழைபொழியவும், மக்கள் நோய்நொடியின்றி, செல்வ செழிப்புடன் வாழஆண்டுதோறும் ஆஸ்திக சமாஜம் சார்பில் நாம சங்கீர்த்தன வைபவம் மற்றும் ஸ்ரீ மஹாருத்ரம் நடத்தப்படும்.

26 வது ஆண்டாக இந்த வைபவம் நேற்று துவங்கியது. மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும். நேற்று காலை 5 மணிக்கு ஸ்ரீ ஜகத்குரு டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ண கனபாடிகள்;மஹா கணபதி ஹோமத்தையும், ஸ்ரீ ஞானானந்தா மற்றும் ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதுகைகளுக்கு பூஜை மற்றும் ஆராதனைசெய்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மஹன்யாச ஜபம், ருத்ர ஆவாஹனம், ஸ்ரீ ருத்ரஜெபம், ஏகாதச திரவிய ருத்ராபிஷேகம், கோபூஜை, ஸ்ரீ ருத்ரஹோமம், வசோர்தாரை, தம்பதிபூஜை, கலசாபிஷே கம், மஹாதீபராதனை, பிரசாதவினியோகம் ஆகியவை நடந்தது.

மதியம் 2:45 க்கு ஸ்ரீ மைதிலி ராமநாதன் குழுவினரின் நாராயணீயமும், மாலை 5 மணிக்கு காம்யாஸ்ரீ பரஸ்ராம் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும், இரவு 7:15 க்கு கணபதிராம பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும் நடந்தது.

சிவபெருமானின், 12 ரூபங்களை மகாதேவதீகன் என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ரூபத்துக்கும்ஒரு கும்பத்தைஎழுந்தருளுவித்து ஒவ்வொரு கும்பத்துக்கும், 11 சிவாச்சாரியர்கள் மஹாருத்ரத்தை பாராயணம் செய்தனர்.

அதே பகுதியில் தனியாக ஹோமக்குண்டம் அமைத்து மஹாருத்ரத்தை பாராயணம் செய்தனர். திரளானோர் பங்கேற்று சிவபெருமானின்அனுக்கிரஹத்தை பெற்றனர்.இன்று காலை 9 மணிக்கு வள்ளி கல்யாண மஹோத்ஸவம் தொடர்ந்து நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Advertisement