ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா; பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

புதுடில்லி : ஆந் திராவின் புட்டபர்த்தியில் நடக்கவுள்ள ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர் .


ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள், வரும் நவ., 23ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள அவரது ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் கொண்டாடப்பட உள்ள நுாற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

.
அறக்கட்டளை இதன் ஒரு கட்டமாக, நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். இதற்காக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன், அறக்கட்டளை நிர்வாகிகள் டில்லி சென்றனர்.


அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர், அறங்காவலர்கள் நீதிபதி வி.ராமசுப்ரமணியன், ரியுகோ ஹிரா, எஸ்.எஸ்.நாகானந்த், ஸ்ரீ சத்ய சாய் சேவா சங்கத்தின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா ஆகியோர், பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர். இந்த சந்தி ப்பு, 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது.




அப்போது, சத்ய சாய்பாபாவுடனான மறக்க முடியாத தருணங்களை அறக்கட்டளை நிர்வாகிகளுடன் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.



அப்போது, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டதாக கூறிய நிர்வாகிகள், விழாவுக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தனர்.



நினைவுப்பரிசு பிரசா ந்தி நிலையத்திற்கு வந்து சுவாமியின் ஆசிகளைப் பெற்று நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க விரும்புவதாக பிரதமர் அவர்களிடம் உறுதியளித்தார்.



இந்த சந்திப்பின்போது, ஸ்ரீ சத்ய சாய்பாபா உடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படம் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.

Advertisement