பகிங்ஹாம் - உத்தண்டி கடல் வரை மூடு கால்வாய் தப்புமா தென்சென்னை?

தென் சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், பகிங்ஹாம் கால்வாயில் வடியும் மழைநீர், உத்தண்டி கடலில் நேரடியாக சேரும் வகையில், 1 கி.மீ., துாரத்திற்கு மூடுகால்வாய் அமைக்கும் புதிய திட்டத்தை நீர்வளத்துறை கையில் எடுத்துள்ளது. மொத்தம், 91 கோடி ரூபாயிலான இப்பணியை ஓராண்டுக்குள் முடித்து, அடுத்த ஆண்டு பருவ மழை பாதிப்புகளில் இருந்து, மக்களை பாதுகாக்கும் வகையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிப்பு தென்சென்னை புறநகர் பகுதியில் உள்ள 62 ஏரிகள், 200க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் வடிகால்வாய்களில் இருந்து வெளியேறும் மழைநீர், துரைப்பாக்கம், ஒக்கியம்மடு வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைந்து, முட்டுக்காடு கடலில் சேர்கிறது.
இதில், ஒக்கியம் மடுவில் குப்பை, ஆகாயத்தாமரை அடைப்பதால், மழைக்காலத்தில் நீரோட்டம் தடைப்பட்டு, ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை பகுதி குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது.
அதனால், இந்த மடுவை அகலப்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 300 அடி அகலத்தில் உள்ள இந்த மடு, 600 அடி அகலமாக மாற்றப்பட உள்ளது. அதேபோல், அடையாறு ஆற்றை ஒட்டி, கோட்டூர்புரம் பகுதியில் துவங்கி, முட்டுக்காடு வரை, 21 கி.மீ., துாரத்தில் பகிங்ஹாம் கால்வாய் உள்ளது.
அதனால், வேளச்சேரி, தரமணி பகுதியில் வடியும் மழைநீர், பகிங்ஹாம் கால்வாயின் நீர்வழிப்பாதையில், 1 கி.மீ., துாரம் பயணித்து, அடையாறு ஆற்றில் கலக்கிறது.
நீலாங்கரை, பால வாக்கம், கொட்டி வாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வடியும் தண்ணீர், 20 கி.மீ., பகிங்ஹாம் கால்வாய் நீர்வழிப்பாதையில் சென்று முட்டுக்காடு கடலில் சேர்கிறது.
போக்குவரத்து நெரிசல் பகிங்ஹாம் கால்வாயில் வடியும் மழைநீர், கடலில் சேரும் வகையில் நேரடி கட்டமைப்பு இல்லை. இதனால், அடையாறு ஆறு, ஒக்கியம் மடு வழியாக செல்வதால், சுற்றுப்புற பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதை தவிர்க்கும் விதமாக, புதிய திட்டத்தை நீர்வளத் துறை இம்மாதம் துவக்கவுள்ளது.
பகிங்ஹாம் கால்வாயில் இருந்து உத்தண்டி கடற்கரை வரை, 1 கி.மீ., துாரத்திற்கு மூடு கால்வாய் அமைக்க உள்ளது. 91 கோடி ரூபாய் மதிப்பில், 20 அடி ஆழம், 20 அடி அகலத்தில் நடக்கவுள்ள இப்பணியை, ஓராண்டுக்குள் முடிக்கவும் நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
@twitter@https://x.com/dinamalarweb/status/1951464282299957507twitter
இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பகிங்ஹாம் கால்வாயில் சேரும் மழைநீரில், ஒரு குறிப்பிட்ட பகுதி வெள்ளத்தை, கடலில் சேர்க்கும் வகையில், உத்தண்டியில் மெகா கால்வாய் கட்டப்பட உள்ளது.
இந்த கால்வாய், இ.சி.ஆர்., குறுக்கே செல்வதால், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பணி செய்ய வேண்டும். ஓராண்டுக்குள் முடிக்கும் வகையில், பணியை வேகப்படுத்த உள்ளோம்.
அடுத்த 2026ம் ஆண்டு பருவமழையின்போது, இந்த மூடுகால்வாய் வழியாக மழை வெள்ளம் கடலில் சேரும். இதன்வாயிலாக, பகிங்ஹாம் கால்வாயில் நீரோட்டம் அதிகரித்து, தென் சென்னை பகுதிகள் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
மேலும்
-
மாஜி அமைச்சரின் மகன், மகள் தண்டனை நிறுத்தம் ரத்து; சிறையில் அடைக்க உத்தரவு
-
ஐரோப்பாவில் வேலை ஆசைகாட்டி மோசடி; 193 பேரை ஏமாற்றியவர் சிக்கினார்
-
நடிகர் வையாபுரி -- விசிறி தாத்தா உட்பட 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
-
திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகுமா; அமைச்சர் கே.என். நேரு பதில்
-
140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையால் வெற்றி; பிரதமர் மோடி பெருமிதம்
-
திமுக எம்பி- எம்எல்ஏ நேருக்கு நேர் மோதல்: ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் அதிர்ச்சி!