சிறுவனை கடத்தி கொன்ற இருவர் சுட்டுப்பிடிப்பு

பெங்களூரு : பணத்துக்காக கடத்தி, சிறுவனை கொலை செய்த இருவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
கர்நாடகாவின் பெங்களூரு, அரகெரேயின் சாந்திநிகே தன் லே - அவுட்டைச் சேர்ந்த கல்லுாரி பேராசிரியர் மகன் நிக் ஷித், 13; கிரைஸ்ட் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் தினமும் மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும், டியூஷன் சென்று படித்து விட்டு, மீண்டும் வீட்டுக்கு வருவார்.
டியூஷன் ஜூலை 30ம் தேதி மாலை டியூஷன் சென்ற நிக் ஷித், இரவு வீட்டுக்கு வரவில்லை.
இது தொடர்பாக பெற்றோர், டியூஷன் ஆசிரியரிடம் தொலைபேசியில் விசாரித்த போது, இரவு 7:30 மணிக்கே புறப்பட்டு விட்டதாக தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஹூளிமாவு போலீசில் புகார் அளித்தனர்.
பு கார் அளித்து விட்டு வீட்டுக்கு வந்த பெற்றோரை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், 'உங்கள் மகன் எங்களுடன் தான் இருக்கிறார்; 5 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு, மக னை கூட்டிச் செல்லுங்கள்' என்று மிரட்டினர்.
அவர்களும் பணத்தை கொடுத்து விடுவதாக தெரிவித்தனர். 'எங்கு தர வேண்டும் என்பதை பின்னர் கூறுகிறோம்' என்று கூறி, அழைப்பை துண்டித்து விட்டனர்.
இதற்கிடையில், நேற்று முன்தி னம் பன்னரகட்டா வனப்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு, எரிந்த நிலையில் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
'எலக்ட்ரானிக் சிட்டி' துணை பிரிவு டி.சி.பி., நாராயண், பெங்களூரு ரூரல் மாவட் ட எஸ்.பி., பாபா சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
மாணவன் கடத்தப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி மாணவன் செல்வது தெரியவந்தது.
அந்த நபர் குறித்து பெற்றோரிடம் கேட்டபோது, தன் வீட்டில் கார் ஓட்டிய முன்னாள் ஓட்டுநர் குருமூர்த்தி என்று தெரிவித்தனர்.
குருமூர்த்தியின் மொ பைல் போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர். கக்கள்ளிபுரா சாலையில் இருப்பது தெரியவந்தது. ஹூளிமாவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரசாமி, எஸ்.ஐ., அரவிந்த் குமார் உட்பட போலீசார் சென்றனர்.
எச்சரித்த போலீசார் அவர்களை பார்த்த குற்றவாளிகள், போலீசாரை தாக்கினர். வானத்தை நோக்கி சுட்டு போலீசார் எச்சரித்தனர்.
அதை பொருட்படுத்தாமல் தாக்கியதால், குருமூர்த்தியின் இரு கால்களிலும், அவருக்கு உதவியாக இருந்த கோபால கிருஷ்ணாவின் காலிலும் துப்பாக்கியால் சுட்டனர்.
படுகாயம் அடைந்த அவர்கள், விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடத்தலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
படம்: நிக் ஷித்
2_DMR_0001 - கைதானவர்கள்
மேலும்
-
காண்டாமிருகங்களை பாதுகாக்க கதிரியக்க ஊசி செலுத்தும் தென்னாப்ரிக்கா!
-
மாஜி அமைச்சரின் மகன், மகள் தண்டனை நிறுத்தம் ரத்து; சிறையில் அடைக்க உத்தரவு
-
ஐரோப்பாவில் வேலை ஆசைகாட்டி மோசடி; 193 பேரை ஏமாற்றியவர் சிக்கினார்
-
நடிகர் வையாபுரி -- விசிறி தாத்தா உட்பட 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
-
திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகுமா; அமைச்சர் கே.என். நேரு பதில்
-
140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையால் வெற்றி; பிரதமர் மோடி பெருமிதம்