துல்லியமான 'நிசார்'; இஸ்ரோ தலைவர் பெருமிதம்

திருவனந்தபுரம் : ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, ஜி.எஸ்.எல்.வி., எப் - 16 ராக்கெட் வாயிலாக, இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய, 'நிசார்' செயற்கைக்கோள் கடந்த மாதம், 30-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


இதுகுறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:



உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை பயன்படுத்தி, இந்தியர்களால் வெற்றிகரமாக ராக்கெட்டை ஏவ முடியும் என்பதை, 'நிசார்' செயற்கைக்கோள் நிரூபித்துள்ளது. இது கற்பனை செய்ய முடியாத சாதனை.


இது, நாசா விஞ்ஞானிகளை உற்சாகமடைய செய்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய தொழில்நுட்ப ரீதியாக மற்றும் மிகவும் பயனுள்ள முக்கியமான 'நிசார்' செயற்கைக்கோள்.



இந்திய ராக்கெட்டை பயன்படுத்தி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதால், முழு நாடும் பெருமைப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement