சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில்

கோவை:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் - கொல்லம்(06119) இடையேயான சிறப்பு ரயில் வரும், ஆக., 27, செப்., 3, 10 ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:40 மணிக்கு கொல்லம் சென்றடையும்.மறுமார்க்கத்தில், கொல்லம் -சென்னை சென்ட்ரல்(06120) இடையேயான சிறப்பு ரயில், ஆக., 28, செப்., 4, 11 ம் தேதிகளில், கொல்லத்தில் இருந்து, காலை 10:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை, 3:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

சிறப்பு ரயிலில் ஏ.சி., மூன்றடுக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.சென்னை சென்ட்ரல் - கொல்லம்(06119) சிறப்பு ரயில், போத்தனுாருக்கு இரவு 11:14 மணிக்கு வந்து செல்லும். கொல்லம் -சென்னை சென்ட்ரல்(06120) சிறப்பு ரயில், போத்தனுாருக்கு மாலை 6:20 மணிக்கு வந்து செல்லும்.

Advertisement