பண மோசடி வழக்கு; அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

புதுடில்லி: பண மோசடி வழக்கில், ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
@1brநம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது சகோதரர் அனில் அம்பானி, 66. இவர், 'ராகாஸ்' எனப்படும் ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் கீழ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
கடந்த 2017 - 19 வரையிலான காலக்கட்டத்தில், அனில் அம்பானிக்கு சொந்தமான ராகாஸ் நிறுவனங்களுக்கு, எஸ் வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது.ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன் சட்டவிரோதமாக பிற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதில், அனில் அம்பானியை மோசடியாளர் என எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்த நிலையில், அவருக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக, ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சோதனைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையாக, அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
வாசகர் கருத்து (3)
அப்பாவி - ,
01 ஆக்,2025 - 09:34 Report Abuse

0
0
Reply
Narayanan Muthu - chennai,இந்தியா
01 ஆக்,2025 - 09:23 Report Abuse

0
0
Ganapathy - chennai,இந்தியா
01 ஆக்,2025 - 10:36Report Abuse

0
0
Reply
மேலும்
-
ரஷ்யா நோக்கி 2 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பிய டிரம்ப்: அமெரிக்கா-ரஷ்யா இடையே பதற்றம்
-
ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா; பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு
-
சிறுவனை கடத்தி கொன்ற இருவர் சுட்டுப்பிடிப்பு
-
துல்லியமான 'நிசார்'; இஸ்ரோ தலைவர் பெருமிதம்
-
பகிங்ஹாம் - உத்தண்டி கடல் வரை மூடு கால்வாய்தப்புமா தென்சென்னை? பருவமழை பாதிப்பை தடுக்க நீர்வளத்துறை முயற்சி
-
மாணவரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் சரண்
Advertisement
Advertisement