மாணவரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் சரண்

சென்னை,
கல்லுாரி மாணவரை 'லேண்ட் ரோவர்' காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், மேலும் ஒருவர் சரணடைந்தார்.

சென்னை, அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர் நித்தின் சாய், 20; தனியார் கல்லுாரி மாணவர். கடந்த, 28ம் தேதி, திருமங்கலம் பள்ளிச்சாலை வழியாக நண்பர் அபிஷேக்குடன் சென்றபோது, 'லேண்ட் ரோவர்' கார் ஏற்றிகொல்லப்பட்டார்.

இது குறித்து விசாரித்த திருமங்கலம் போலீசார், கே.கே.நகரைச் சேர்ந்த தி.மு.க., கவுன்சிலர் தனசேகரன் மகள் வழி பேரன் சந்திரசேகர், 20 மற்றும் இவரது கூட்டாளிகள் ஆரோன், 20 மற்றும் யாஸ்வின், 20 ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில், சந்திரசேகரின் கூட்டாளியான அதியன், 20, என்ற கல்லுாரி மாணவர், நேற்று சரணடைந்தார். இவர், சம்பவத்தன்று கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரில் இருந்துள்ளார்; அவரை தேடி வந்த நிலையில், திருமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement