முதல்வர் உடல்நலன் விசாரித்ததில் அரசியல் இல்லை: ராமதாஸ்

13

சென்னை: முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலன் குறித்து விசாரித்தார்.


முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி உள்ளார். அவரை ஓபிஎஸ், பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இன்று வைகோ மற்றும் அவரது மகன் துரை ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் நன்றாக இருக்கிறார். மருத்துவர்களிடமும் விசாரித்தேன். விரைவில் குணமடைய வேண்டும் என என்னுடைய வாழ்த்து தெரிவித்தேன். முதல்வர் உடல்நிலை சரியில்லை. விரைவில் குணமடைய வாழ்த்துவது வழக்கம். அதற்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.

ராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி. அதேபோல், நான் இருக்கும் இடம் தான் பாமக, தைலாபுரம் பாமக.

கட்சி பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொள்ள யார் யார் உரியவர்கள் என்பதை கட்சி தீர்மானிக்கும். அவர்களுக்கு அழைப்பு போகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement