நள்ளிரவில் உறவினர்கள் தாக்குதல் காதல் ஜோடியை மீட்ட போலீசார்
ஆதம்பாக்கம்,நள்ளிரவில் சுற்றி வளைத்து தாக்கிய உறவினர்களின் பிடியில் இருந்து, காதல் ஜோடியை போலீசார் மீட்டனர்.
ஆதம்பாக்கம், குன்றக்குடி நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கல்லுாரியில் படிக்கும் இவரது 19 வயது மகளும், தி.நகரில் கடையில் பணிபுரியும் வியாசர்பாடி, முல்லைநகரைச் சேர்ந்த முகமது இர்பான், 23, என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, இருவரும் மவுன்ட் சுரங்கப்பாதை அருகே பேசிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த பெண்ணின் உறவினர்கள், இருவரையும் தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டனர். 'மேஜர் என்பதால், அவர்களின் விருப்பத்தை மீறி எதுவும் செய்ய முடியாது' என, போலீசார் தெரிவித்தனர். முகமது இர்பான் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மகளிடம் அரை மணிநேரம் பேச்சு நடத்தினர். ஆனால், அப்பெண் தன் காதலில் உறுதியாக இருந்தார். இதையடுத்து, அவரை மடிப்பாக்கத்தில் உள்ள அரசு மகளிர் விடுதிக்கு அனுப்பி வைத்தனர். முகமது இர்பானை போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
மடிப்பாக்கம் மகளிர் போலீசார், அப்பெண்ணிற்கு 'கவுன்சிலிங்' அளிக்கவுள்ளனர். அதிலும் அவர் உறுதியாக இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும்
-
மாஜி அமைச்சரின் மகன், மகள் தண்டனை நிறுத்தம் ரத்து; சிறையில் அடைக்க உத்தரவு
-
ஐரோப்பாவில் வேலை ஆசைகாட்டி மோசடி; 193 பேரை ஏமாற்றியவர் சிக்கினார்
-
நடிகர் வையாபுரி -- விசிறி தாத்தா உட்பட 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
-
திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகுமா; அமைச்சர் கே.என். நேரு பதில்
-
140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையால் வெற்றி; பிரதமர் மோடி பெருமிதம்
-
திமுக எம்பி- எம்எல்ஏ நேருக்கு நேர் மோதல்: ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் அதிர்ச்சி!