நடிகர் வையாபுரி -- விசிறி தாத்தா உட்பட 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் நடிகர் வையாபுரி, விசிறி தாத்தா கணேசன், தடகள வீரர் ரஞ்சித்குமார் உட்பட 4 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மதுரை மடீட்சியா அரங்கத்தில் நெல்லை பாலு தலைமையில் நடைபெற்றது. புதிய தலைவராக கதிரவனும் செயலாளராக, ஷண்முகமும் பொருளாளராக கார்த்திக் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெ. கார்த்திக் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்வில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் வனிதா, திரைப்பட நடிகர் வையாபுரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம், மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ரோட்டரி ஆலோசகர் அழகப்பன், துணை ஆளுநர் நெல்லை பாலு வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வில் 8,000 க்கும் மேற்பட்ட அனாதை சடலங்களை அடக்கம் செய்த புதுக்கோட்டை 515 கணேசன் என்ற முதியவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவர் 2,200 க்கும் அதிகமான கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவமும், விபத்தில் உயிருக்கு போராடிய 9 பேரை பிழைக்க வைத்து தன்னலம் இன்றி சேவை செய்தவரும் ஆவார்.
கோயில்கள் மற்றும் திருவிழாக்கள் சமயத்தில் பக்தர்களுக்கு விசிறி வீசும் 'விசிறி தாத்தா' என்று அழைக்கப்படும் நடராஜனுக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருதினை மாற்றுத்திறனாளி தடகளப் பயிற்சியாளர் மற்றும் வீரர் ரஞ்சித் குமார்,நடிகர் வையாபுரி ஆகியோர் பெற்றனர்.
காவல்துறை துணை ஆணையாளர் வனிதா, ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற மெட்ராஸ் ரெஜிமென்ட் சுபேதார் ரமேஷ், இசைக் கலைஞர் மௌன ராகம் முரளி, மகப்பேறு மருத்துவர் சிந்தியா மார்ட்டின், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் ரத்த வங்கி சேமிப்பு மேலாளர் ரவி ஆகியோருக்கு வொக்கேஷனல் எக்ஸலன்ஸ் விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் இந்த நிகழ்வில் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி வீரர்கள் வீரர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தும் ஸ்போர்ட்ஸ் ஷூக்களும், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறப் போகும் மாற்றுத்திறனாளி வீரர் குருநாதனுக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டன. முடிவில் செயலாளர் சண்முகம் நன்றி கூறினார். நிகழ்வினை , ஆதவன் தொகுத்து வழங்கினார்.
மேலும்
-
அக்னிஹோத்ரிகள் 120 பேர் திருப்பதியில் கவுரவிப்பு!
-
வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்புடன் விளையாடிய சிறுவன்
-
முதல் அரைசதம் அடித்தார் ஆகாஷ் தீப்; ஓவலில் இந்திய அணி சிறப்பான ஆட்டம்
-
கொலை செய்யப்பட்ட தமிழ் சினிமா ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது
-
போதைப்பொருள் கலாசாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; இபிஎஸ் வேண்டுகோள்
-
சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சிபிஎஸ்இ அதிகாரி சடலமாக மீட்பு