திமுக எம்பி- எம்எல்ஏ நேருக்கு நேர் மோதல்: ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் அதிர்ச்சி!

25


தேனி: தேனி ஆண்டிப்பட்டியில் அரசு நிகழ்ச்சியில், திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் எம்எல்ஏ மகாராஜன் மேடையிலேயே கடுமையான வார்த்தைகளில் சண்டையிட்டனர். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. வரவேற்பு பேனரில் எம்எல்ஏ படம் மட்டும் வைத்து விட்டு, எம்பி படம் வைக்கவில்லை. இதனால் திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கோபம் அடைந்து பேசினார்.

பதிலுக்கு நலத்திட்ட உதவிகளை நான் தான் வழங்குவேன் என நலத்திட்ட உதவி அட்டையை தங்க தமிழ்ச்செல்வனின் கையில் கொடுக்காமல் எம்எல்ஏ மகாராஜன் பிடுங்கியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது.




புரோட்டாகால்படி தேனி பார்லிமென்ட் எம்பி படம் வரவேற்பு பேனரில் எதற்கு இல்லை என மாவட்ட கலெக்டரிடம் கேள்வி எழுப்பியதோடு மேடையிலேயே எம்எல்ஏ மகாராஜனை திட்டி தீர்த்தார். தன்னை திட்டுவதாக கூறி தங்க தமிழ்செல்வனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது இருவரும் நான் தான் வழங்குவேன் என மாறி மாறி அடம் பிடித்தனர். இதனால் தமிழ்ச்செல்வன் மற்றும் எம்எல்ஏ மகாராஜன் கடும் வாக்குவாதம் செய்ய மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மேடையிலேயே பரபரப்பு ஏற்பட்டது.


இதையடுத்து துவக்க விழா நிகழ்ச்சி முழுமையாக நடைபெறாமல் பாதியிலேயே முடித்து விட்டு, மாவட்ட கலெக்டர் உட்பட அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

Advertisement