தமிழக தேர்தல் களம் தி.மு.க.,வுக்கு எதிராகும்

தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. காவிரி - வைகை - குண்டாறு திட்டத்திற்கு, 1 ரூபாய் கூட தி.மு. க., அரசு வழங்கவில்லை. அச்சன்கோவில் பம்பை - வைப்பாறு இணைப்பு திட்டத்திற்கு பேச்சு நடத்த கூட முன் வரவில்லை. பெற்ற உரிமைகளை பறிகொடுக்கிறது.


முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் அதற்கு கேரள அரசு அனுமதிக்கவில்லை. நீர்மட்டம் 136 அடி ஆன உடனேயே, கேரளாவின் பேச்சை கேட்டு நீர் திறந்து விடுகின்றனர். விவசாயிகளுக்கு விரோதமாக தி.மு.க., அரசு உள்ளது. இப்படியே போனால் 2026 தேர்தல் களம் தி.மு.க.,வுக்கு எதிராகும். அதை செய்து காட்டுவோம்.

- பி.ஆர்.பாண்டியன்,

தலைவர், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு

Advertisement