அரசை விமர்சித்தால் வழக்கு போடுவதா?

1

திருப்பத்துார் மா வட்டம், நாட்றம்பள்ளியில், ஹிந்து மக்கள் கட்சி சார்பாக , பொதுக்கூட்டம் நடத்த, 15 நாட்களுக்கு முன்பே மனு அளித்தோம். ஆனால், நாட்களை கடத்தி விட்டு, திடீரென அனுமதி இல்லை என போலீசார் கூறுகின்றனர். ஹிந்து மக்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு தொடர்ச்சியாக இப்படி தடை விதிப்பது அநீதி, அக்கிரமம்; சட்டத்துக்கு புறம்பானது.


அரசியல் கட்சியினர், தேர்தல் களத்துக்கு முன்னோட்டமாக பிரசாரம் செய்கின்றனர். அதைத் தடுக்கும் போலீசார், தி.மு.க., கூட்டணி கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்குகின்றனர்.


தி.மு.க., அரசை விமர்சிப்பவர்கள் அல்லது கோரிக்கைகளை முன் வைப்ப வர்கள் மீதெல்லாம் வழக்கு போட்டு சிறையில் தள்ளுவது; அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது, ஜனநாயக விரோத போக்கு.


- அர்ஜுன் சம்பத்

தலைவர், ஹிந்து மக்கள் கட்சி

Advertisement