குண்டுமல்லி விலை உயர்வு

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டி, கோம்பை, அலங்காநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் குண்டுமல்லி சாகுபடி அதிகளவில் நடக்கிறது.

தினந்தோறும் விளையும் பூக்களை, கூலியாட்கள் மூலம் பறித்து, நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் தினசரி பூ மார்க்கெட்டுகளுக்கு வியாபாரிகள் மூலம் ஏலத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஆடி மாதத்தையொட்டி விசேஷ தினங்கள் இல்லாதால் குண்டுமல்லி விலை கிலோ, 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, நேற்று குண்டுமல்லி பூக்கள் விலை உயர்ந்து கிலோ, 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement