சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலையில் இருந்து, இ.ஆர்., தியேட்டர் சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் ஜல்லி கற்கள், மண் குவியலாக காணப்படுகிறது.


இதனால், வாகனங்கள் செல்லும்போது சறுக்கி விழும் அபாயம் உள்ளது. இரவில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. வயதானவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சாலையில் குவிந்துள்ள மண், ஜல்லிக்கற்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement