இந்திய பெண்கள் சாம்பியன் * உலக யூத் மல்யுத்தத்தில்...

ஏதென்ஸ்: கிரீசில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (17 வயது) நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. 61 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் யாஷிதா, அமெரிக்காவின் டயானா ரோஸ் மோதினர். இதில் யாஷிதா 0-11 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இத்தொடரில் 10 எடை பிரிவுகளில் களமிறங்கியது இந்தியா. இதில் 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் கைப்பற்றியது. 151 புள்ளி எடுத்து இந்திய பெண்கள் அணி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கடந்த ஆண்டு இந்திய பெண்கள் அணி முதன் முறையாக (5 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம்) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து இருந்தது. அமெரிக்கா (142 புள்ளி), ஜப்பான் (113) அணிகள் அடுத்த இரு இடம் பிடித்தன.

Advertisement