டேபிள் டென்னிஸ்: இந்தியா சாதனை

பரானா: டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் இரட்டையர் பிரிவில் முதன் முறையாக இந்தியா பைனலுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
பிரேசிலில் டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தக்கார் ஜோடி, 3-2 என்ற செட் கணக்கில் (5-11, 11-9, 11-6, 8-11, 11-5) தென் கொரியாவின் ஹுவான் செங், குவான் ஹாங் ஜோடியை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் தியா, மனுஷ் ஜோடி, 3-0 என (11-7, 11-2, 11-7) சிலியின் நிகோலஸ், பவுலினா ஜோடியை சாய்த்து பைனலுக்குள் நுழைந்தது.
உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடரில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் இந்தியா பைனலுக்கு முன்னேறியது இது தான் முதன் முறை.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, சக வீராங்கனை தியாவை 3-1 என (11-9, 9-11, 11-9, 15-13) என வீழ்த்தினார்.
மேலும்
-
பஞ்சு வரத்து குறைவால் நுாற்பாலைகள் தவிப்பு கையிருப்பை நம்பியே இயங்கும் நிலை
-
வர்த்தக துளிகள்
-
என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்தது என் மகன் தான்!: மவுனம் கலைத்தார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
-
பங்கு சந்தை முதலீட்டாளர்கள் 'டாப் 10' மாநிலங்களில் பீஹார்
-
டில்லி உஷ்ஷ்ஷ்: பங்களாவை மறுத்த மாயாவதி!
-
புகார் மீதான சமரச தீர்வுக்கு ரூ.40 கோடி கட்டிய என்.எஸ்.இ.,