சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் 'திடீர்' மரணம்

செஞ்சி : செஞ்சி அருகே உடல் நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழந்தார்.

நல்லான் பிள்ளை பெற்றாள் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ஜாஹிர் உசேன், 45; பணிபுரிந்து வந்தார்.

இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக விடுப்பில் இருந்து, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 6:40 மணியளவில் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டில் திடீரென இறந்தார்.

காவல்துறை உயர் அதிகாரிகளும் போலீசரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement