அக்னிஹோத்ரிகள் 120 பேர் திருப்பதியில் கவுரவிப்பு!

திருப்பதி:காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சதுர்மாஸ்ய விரதம் முன்னிட்டு அகில பாரதிய அக்னிஹோத்ரா சதாஸ், திருப்பதியில் நடந்தது.வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சடங்குகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு நாள் விழா இன்று நடந்தது.

விழாவில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த அக்னிஹோத்ரிகள் 120 பேர் கவுரவிக்கப்பட்டனர்.

ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அக்னிஹோத்ரிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் அக்னிஹோத்ரிகளுக்கு சிறப்பு தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement