டிஐஜி வருண்குமார் விவகாரம்; சீமானுக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

8



சென்னை: டிஐஜி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை கூற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

திருச்சி சரக டிஐஜி வருண்குமார், திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த போதே, ஒரு வழக்கு ஒன்றில் சீமானுடன் மோதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரமாக குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியினர், டிஐஜி வருண்குமாரையும், அவரது குடும்பத்தினரையும் சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, பொதுவெளியில் ஆதாரம் இல்லாமல் தன் மீது அவதூறு கருத்துக்களை கூறுவதாக சீமான் மீது டிஐஜி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், தனக்கு ரூ.2.10 கோடி மான நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், டிஐஜி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்கவும் சீமான் தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement