ப.வேலுார் காவிரியில் குளிக்க தடை ரத்து

ப.வேலுார், ஆடிப்பெருக்கு நாளான இன்று, ப.வேலுார், பொத்தனுார் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதித்ததை போலீசார் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா கூறியதாவது:

ப.வேலுார், பொத்தனுார் காவிரி ஆற்றில் பொதுமக்களின் வேண்டுகோளையடுத்து, ஆடிப்பெருக்கு நாளான இன்று, காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க விதித்திருந்த தடை ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் வழக்கம்போல் காவிரி ஆற்றில் குளித்து மற்றும் வழிபாடு செய்யலாம். இன்று மாலை, 6:00 மணிக்கு, ப.வேலுார் காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மோட்ச தீபத்துக்கு சிறப்பு பூஜை செய்து, ஆற்றில் மோட்ச தீபம் விடுவது வழக்கம்.



இதற்கான காசி விஸ்வநாதர் கோவில் பகுதியான காவிரி ஆற்றுக்குள் மோட்ச தீபம் விடும்போது பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வழிபாடு செய்து, பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement