ராமேஸ்வரத்தில் நாளை நடை அடைப்பு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வத மண்டக படிக்கு செல்வதால் நாளை (ஆக., 4) கோயில் நடை அடைக்கப்படுகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜூலை 19ல் ஆடித் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை 30ல் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து நாளை காலை 6:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் புறப்பாடாகி வீதி உலா சென்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருள்வர்.

அங்கு மகா தீபாராதனை முடிந்ததும், அங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி வீதி உலா வந்து இரவு 10:00 மணிக்கு மீண்டும் கோயிலுக்கு திரும்புவர். இதனால் நாளை முழுவதும் கோயில் நடை அடைக்கப்படும்.

Advertisement