ஜி.எஸ்.டி., பில் இல்லாமல் வந்த எண்ணெய் வாகனம் சிறைபிடிப்பு
நல்லம்பள்ளி, :முன்னணி நிறுவனத்தின் பெயரில் இன்ஜினுக்கு ஊற்றப்படும் எண்ணெயை, ஜி.எஸ்.டி., பில் இல்லாமல், சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு விற்பனைக்கு கொண்டு வந்த வாகனத்தை, தர்மபுரி மாவட்ட ஏஜென்சியினர் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி, கிரு0ஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஜி.எஸ்.டி., பில் இல்லாமல், வாகனங்களுக்கு தேவையான போலி இன்ஜின் எண்ணெயை விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக, குற்றசாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில், தர்மபுரி மாவட்ட எண்ணெய் டீலரின் மேலாளர் ராஜசேகர் மற்றும் நிறுவத்தின் ஊழியர்கள், நேற்று தர்மபுரி மாவட்டம், சேலம்-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை சேஷம்பட்டி பிரிவில், தர்மபுரி நோக்கி வந்த வாகனத்தை பிடித்து சோதனை செய்தனர்.
அதில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ மொபைல்ஸ் கடைகளுக்கு
ஜி.எஸ்.டி., பில் இல்லாமல், வாகனங்களுக்கான (கல்ப் நிறுவனம் பெயரில்) இன்ஜினுக்கு ஊற்றப்படும் எண்ணெயை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை சிறைபிடித்து, அதியமான்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து, ராஜசேகர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தின் டீலராக நாங்கள் உள்ளோம். இந்நிலையில், எங்களுக்கு தெரியாமல் சேலத்தில் இருந்து, தனியார் நிறுவனம் மூலம், தர்மபுரியில் எண்ணெய் வாங்கும் கடை உரிமையாளரின் ஜி.எஸ்.டி., எண் இல்லாத பில்கள் மூலம், எண்ணெயை கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. மேலும், இது போலியான ஆயிலாகவும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, வாகனத்தை போலீசில் ஒப்படைத்துள்ள நிலையில், வணிக வரித்துறையில் புகார் அளிக்கவுள்ளோம்.
அதிகாரிகள் உரிய விசாரணை
நடத்தினால், போலி எண்ணெய் மற்றும் போலி, ஜி.எஸ்.டி., பில் குறித்த உண்மை தெரியவரும்.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
கிராமப்புற ஏரிகளில் நடக்கும் கனிமவள கொள்ளை உயிர்பலி அபாயத்தில் காஞ்சிபுரம் விவசாயிகள்
-
'கமகம' ஸ்வீட்ஸ் டீ ஸ்டால் திறப்பு விழா
-
நாளை (ஆக. 5) மின்தடை (காலை 9:00 -மாலை 5:00 மணி )
-
'குறைந்த பாடல்கள் எழுதினாலும் நிறைந்த புகழ் பெற்றவர் மாயவநாதன்'
-
கைக்கெட்டும் தூரத்தில் மின்சாதனங்கள் * அச்சத்தில் கிராம மக்கள்
-
சூர்யா இசை பள்ளியின் 4ம் ஆண்டு விழா