பங்கு சந்தை முதலீட்டாளர்கள் 'டாப் 10' மாநிலங்களில் பீஹார்

புதுடில்லி:நாட்டிலேயே மிகக் குறைந்த தனி நபர் வருமானம் கொண்ட மாநிலமான பீஹாரில், பங்குச் சந்தை முதலீட்டின் மீதான ஆர்வம் எதிர்பாராத வளர்ச்சியை கண்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், பீஹாரில் பங்குச் சந்தை முதலீடு மேற்கொள்பவர்களின் எண் ணிக்கை 679 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. டில்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பொருளாதார ரீதியாக சற்று முன்னேறிய நிலையில் உள்ள மாநிலங்களின் முதலீட்டாளர் எண்ணிக்கையை விட இது அதிகமாகும்.
@block_B@ டாப் 10 மாநிலங்கள் முதலீட்டாளர் எண்ணிக்கை (லட்சத்தில்) வளர்ச்சி (%) 2020 - 21 2025 - 26* மகாராஷ்டிரா 60 186 212 உத்தர பிரதேசம் 23 131 471 குஜராத் 38 101 165 மேற்கு வங்கம் 20 68 240 ராஜஸ்தான் 13 66 394 தமிழகம் 22 64 193 கர்நாடகா 19 64 227 மத்திய பிரதேசம் 10 56 465 ஆந்திரா 16 52 231 பீகார் 7 52 679 * மே மாதம் வரை ஆதாரம்: என்.எஸ்.இ.,block_B