என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்தது என் மகன் தான்!: மவுனம் கலைத்தார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்



சென்னை: “என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்து உளவு பார்த்தது, என் மகன் அன்புமணிதான். நான் உருவாக்கி வளர்த்த பா.ம.க.வுக்கு அவர் உரிமை கோர முடியாது” என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் வீடு அமைந்துள்ளது. அங்கே அவர் வழக்கமாக அமரும் நாற்காலியின் அடிப்பக்கத்தில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ஒட்டு கேட்கும் கருவி ரகசியமாக பொருத்தப்பட்டு இருப்பதை கண்டுபிடிட்டதாக ஜூலை 11ல் ராமதாஸ் கூறினார்.

அது தொடர்பாக, தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தி, காவல் துறையிலும் புகார் அளித்தார். யார் அந்த கருவியை வைத்தார்கள் என்பது தனக்கு தெரியும்; ஆனால் உடனே சொல்ல மாட்டேன் என்று செய்தியாளர்களிடம் பேசும்போது சஸ்பென்ஸ் வைத்தார். இரண்டு நாட்களாக சென்னையில் முகாமிட்டுள்ள ராமதாஸ் நேற்று அளித்த பேட்டியில் சஸ்பென்சை உடைத்தார். அவர் கூறியதாவது:

என்னை உளவு பார்த்தவர் அன்புமணிதான். அவர்தான் தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை ரகசியமாக வைத்துள்ளார். அப்பாவை உளவு பார்த்த மகன் உலகிலேயே அன்புமணி ஒருவர்தான் இருப்பார்.

தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது என கங்கைகொண்ட சோழபுரத்தில், பிரதமர் மோடி சொன்னது முற்றிலும் உண்மை. பாட்டாளி மக்கள் கட்சி என்பது, 96,000 கிராமங்களுக்கு சென்று, நான் உருவாக்கி வியர்வை சிந்தி வளர்த்த கட்சி. அதற்கு அன்புமனி உரிமை கொண்டாட முடியாது.

ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை அறிவித்துள்ளேன். வேறு யாரும் பா.ம.க. பெயரில் பொதுக்குழுவை கூட்டுவது, சட்டத்திற்கும், கட்சி விதிகளுக்கும் எதிரானது.

ஆனால் அன்புமணி, 9ம் தேதி பொதுக்குழு கூட்ட அழைப்பு விடுத்துள்ளார். கட்சி விதிப்படி 15 நாட்களுக்கு முன்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவிக்கை அனுப்ப வேண்டும் என்ற நடைமுறைகூட அவருக்கு தெரியவில்லை.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பொய்யை அன்புமணி சொல்கிறார். கட்சியை பலப்படுத்த, 108 மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுத்தேன். அத்தனை பேருக்கும் அன்புமணி போன் செய்து, 'என்னை கட்சியில் இருந்துராமதாஸ் நீக்கப் போகிறார். எனவே, அவர் கூட்டும் கூட்டத்துக்கு போகாதீர்கள்'என கூறியுள்ளார். அதனால், 100 மாவட்ட செயலர்கள் வரவில்லை. எனவே, அவர்களை நீக்கிவிட்டு, கட்சிக்காக உழைத்த வேறு 100 நபர்களை, செயலர்களாக நியமித்து விட்டேன்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

@block_B@

கட்சி விதிகள் சொல்வது என்ன?

பொதுக்குழு கூட்டுவதானால், “15 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு கொடுக்க வேண்டும்” என ராமதாஸ் கூறுகிறார். அன்புமணியோ, “கட்சி அமைப்பு விதி 16ன்படி, பொதுச்செயலர் பொதுக்குழுவை கூட்டலாம். விதி 15 'பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர் தலைமையில், பொதுக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்' என சொல்கிறது” என்கிறார். “ராமதாஸ், ஏப்ரல் 10ம் தேதி தன்னை தலைவராக அறிவித்து விட்டார். எனவே, பொதுக்குழுவை கூட்ட அவருக்குதான் உரிமை” என, ராமதாஸ் தரப்பு கூறுகிறது. இருவரும் போட்டி போட்டு பொதுக்குழு நடத்திய பிறகு, எது உண்மையான பொதுக்குழு என்று முடிவு செய்ய கோர்ட்டுக்கும், தேர்தல் கமிஷ னுக்கும் போக வாய்ப்புள்ளது” என ஒரு பா.ம.க. நிர்வாகி தெரிவித்தார்.block_B

Advertisement