மக்கள் மன்ற நிகழ்ச்சி டி.ஐ.ஜி., குறைகேட்பு
புதுச்சேரி, : அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து, புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதேபோல், நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், ரெட்டியார்பாளைத்தில் எஸ்.பி., வம்சீதர ரெட்டி, போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் எஸ்.பி.,க்கள் செல்வம், மோகன்குமார் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.
இதில், பொது மக்களிடம் இருந்து 83 புகார்கள் பெறப்பட்டு, 51 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்கள் மன்றத்தில் மொத்தமாக 37 பெண்கள் உட்பட 191 பேர் பங்கேற்று புகார்களை தெரிவித்தனர்.
மேலும்
-
பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ்
-
7 வயது சிறுமியை கடித்து குதறிய 'ராட்வைலர்' நாய்
-
குடிநீர் திட்டத்தை தொடர்ந்து சீர்குலைக்கும் மர்மக்கும்பல் * பரிதவிக்கும் அரசு அதிகாரிகள்
-
சிட்டி பேனர்: தொடர்கிறது பள்ளிகளில் கலாசார சீரழிவு மற்றும ஒழுங்கீன செயல்கள் கண்டுகொள்ளாத கல்வித்துறையால் குற்றங்கள் அதிகரிப்பு
-
கிராமப்புற ஏரிகளில் நடக்கும் கனிமவள கொள்ளை உயிர்பலி அபாயத்தில் காஞ்சிபுரம் விவசாயிகள்
-
'கமகம' ஸ்வீட்ஸ் டீ ஸ்டால் திறப்பு விழா