பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ்

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக ஒரு பேட்டரி பஸ் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்தரப்பின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள், கிரிவீதியில் வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன் சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்க கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு இலவசமாக 18 பேட்டரி கார், 13 பேட்டரி பஸ்,என 31 மின் வாகனங்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில் ( அக்ஷரா குரூப் ஆஃப் கம்பெனிஸ் திருப்பூர்) தனியார் நிறுவனத்தின் சார்பில்14 பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் பஸ்ஸை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது கிரி வீதியில் கோயில் சார்பில் 32 மின் வாகனங்கள் பக்தர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

Advertisement