புதிய பள்ளி கட்டடங்கள் திறப்பு

செஞ்சி : நாட்டார்மங்கலத்தில் புதிய பள்ளி கட்டடம் மற்றும் நியாய விலை கடை கட்டடத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலம் அரசு துவக்க பள்ளியில் ரூ. 32.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ரூ.12.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டடம் திறப்பு விழா நடந்தது.

ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன் முன்னிலை வகித்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் மாணிக்கம் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., புதிய கட்டடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, செந்தமிழ்செல்வன், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, பி.டி.ஓ.,க்கள் ராமதாஸ், இளங்கோவன், ஊராட்சி துணைத் தலைவர் வனிதா சுபாகரன், மற்றும் ஊராட்சி செயலாளர் சவுந்தரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன் நன்றி கூறினார்.

Advertisement