ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு த.வெ.க.,வில் பயிற்சி

சென்னை : இரண்டு கோடி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக, த.வெ.க.,வின் 20,000 ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க, அக்கட்சித் தலைவர் விஜய் இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.

இதற்கென, 'MY TVK' என்ற பெயரில், மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி வாயிலாக, ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் உறுப்பினர்களாக சேர்க்க, வியூகம் வகுக்கப்பட்டது.

செயலியை இயக்குவது குறித்து, தமிழகம் முழுதும் உள்ள ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார் என, 26 மாவட்டங்களில் உள்ள, 56 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது.

அதன்படி, 15,652 ஓட்டுச்சாவடிகளைச் சேர்ந்த 20,000த்துக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள், பயிற்சியில் பங்கேற்றனர்.

Advertisement