கூட்டணி ஆட்சியை ஆதரிக்கிறேன் பிரசாரத்தை துவக்கிய பிரேமலதா அறிவிப்பு

சென்னை : சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட ஆரம்பாக்கத்தில் நேற்று தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா துவக்கினார்.


முன்னதாக, சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், விஜயகாந்த் நினைவிடத்தில், அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், இளைஞரணி செயலர் விஜயபிரபாகரன் உடன் இருந்தனர்.



அப்போது, பிரேமலதா அளித்த பேட்டி:



விஜயகாந்த் பிறந்த நாளான வரும் 25ல், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். என் தேர்தல் பிரசாரத்தில், காலையில் நிர்வாகிகள் சந்திப்பு, மாலை 4:00 -இரவு 10:00 வரை மக்கள் சந்திப்பு நடக்கும்.


இலங்கை தமிழர்களால் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட ரதமும், பிரசாரத்தில் இடம்பெறும்.

கூட்டணியே முடிவாகாத நிலையில், 'யாரை திட்டி பிரேமலதா பேசுவார்' என கேட்கின்றனர். திட்டுவதும், குறை சொல்வதும் அரசியல் இல்லை.


இந்த முறை என் பிரசாரம் வேறு வகையில் இருக்கும். நான் சொல்லும் வார்த்தைகள், தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நலன் பயக்கும் வகையில் இருக்கும்.




தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணி, நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம்.



விஜயகாந்த் உடல்நலக் குறைவாக இருந்தபோது, முதல்வர் ஸ்டாலின் பலமுறை வந்து சந்தித்தார். எனவே, அரசியல் நாகரிகம், நட்பு கா ரணமாக முதல்வரை சந்தித்து உடல்நலம் விசாரித்தோம். வேறு எந்த நோக்கமும் இல்லை.



பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன் விவகாரம் குறித்து, நான் கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement