ஆடி சுவாதி சுந்தரர் குருபூஜை

திருவெண்ணெய்நல்லுார் : ஆடி சுவாதி சுந்தரர் குருபூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

திருவெண்ணெய் நல்லுாரில், 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவார பாடல் பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி சுவாதி சுந்தரர் குருபூஜை கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது.

இதையொட்டி காலையில், சுந்தரர் திருமண கோலத்தில் எழுந்தருளல்; சிவ பெருமான் அடிமை சாசனம் காட்டுதல்; சுந்தரர் தடுத்தாட்கொண்ட வரலாறு ஆகியவை குறித்த ஆன்மிக சொற்பொழிவு நடைபெ ற்றது. மதியம் கிருபாபுரீஸ்வரர் ரிஷபாரூடரா க காட்சி கொடுத்து திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம், 63 நாயன்மார்களுக்கு அபிஷேக ஆராதனை, சுந்தரமூர்த்தி சுவாமிக்கு சுந்தரர் குரு பூஜை, மகேஸ்வர பூஜை, மற்றும் அன்னதானம் வழங்கப்ப ட்டது.

தொடர்ந்து, சிவதீர்த்தத்திற்குசுந்தரமூர்த்தி சுவாமி எழுந்தருளிமுதலை வாயில் பிள்ளைத் தருவித்த ஐதீகமும் நடந்தது.

Advertisement