வக்கீல் வீட்டில் ரூ.50 லட்சம் 50 சவரன் திருட்டு

மயிலம், : வழக்கறிஞர் வீட்டில் வைத்திருந்த, 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 சவரன் நகைகள் திருடு போனது குறித்து மயிலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே ஏரளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்; வழக்கறிஞர். இவர் வீட்டில் உள்ள பீரோவில், 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும், 50 சவரன் நகைகளை வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் பீரோவை திறந்து பார்த்த போது, நகை மற்றும் பணத்தை காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், மயிலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement