பெண்ணிடம் வம்பு செய்தவரை கைது செய்ய கோரி போராட்டம்

புதுக்கோட்டை: பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றவரை கைது செய்யக்கோரி, கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், சவேரியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சலேத்துமேரி, 40. இவர் தச்சன்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் சமையல் வேலைக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம். ஜூலை 30ம் தேதி காலையில், அவர் பணிக்கு சென்றபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த பஞ்சர் கடை நடத்தி வரும் பாஸ்கர், 42, என்பவர், அவரை வழிமறித்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
கந்தர்வகோட்டை போலீசில் அவர் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், செங்கிப்பட்டி-- கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் தச்சங்குறிச்சி பகுதியில் நேற்று சாலை மறியல் செய்தனர்.
அவர்களிடம் பேச்சு நடத்திய போலீசார், மானபங்கம் படுத்த முயன்றவரை, விரைவில் கைது செய்வதாக உறுதி கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும்
-
100% சிறப்பாக செயல்படும் 'நிசார்' செயற்கைக்கோள்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
-
கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம்; ஓபிஎஸ் கேள்விக்கு நயினார் பதில்
-
ராணுவத்தை இழிவுபடுத்துவதா: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம்
-
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: சென்னை ஐகோர்ட் வேதனை
-
ஓவல் டெஸ்டில் திரில் வெற்றி: தொடரை சமன் செய்தது இந்தியா
-
ஓவல் டெஸ்ட்: இந்தியா வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்