அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

விழுப்புரம்: அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டவர் மீது ஏறி டிரைவர், கண்டக்டர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் ஆர்.பி., நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம், 45; அரசு பஸ் கண்டக்டர். இவரும், விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த டிரைவர் குபேர், 50; ஆகிய இருவரும் கடந்த, 28ம் தேதி குண்டலபுலியூர் செல்லும் அரசு பஸ்சில் பணியில் இருந்தனர்.
அப்போது பயணிகளுடன் பஸ்சை நிறுத்திவிட்டு, அசோகபுரி அருகே டீக்கடையில் டீ குடித்தனர். இதனால் இருவருக்கும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் 'மெமோ' கொடுத்து, சங்கராபுரத்திற்கு இடமாற்றம் செய்தனர். இதைக்கண்டித்து, பாலசுந்தரம், குபேர் ஆகியோர் நேற்று காலை 10:00 மணியளவில் தங்கள் உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு விழுப்புரம், 2வது அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் 'டவர்' மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இருவரும் டவரில் இருந்து கீழே இறங்கினர். பின், போலீசார் அறிவுரையை ஏற்று இருவரும் அங்கிருந்து சென்றனர்.
மேலும்
-
100% சிறப்பாக செயல்படும் 'நிசார்' செயற்கைக்கோள்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
-
கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம்; ஓபிஎஸ் கேள்விக்கு நயினார் பதில்
-
ராணுவத்தை இழிவுபடுத்துவதா: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம்
-
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: சென்னை ஐகோர்ட் வேதனை
-
ஓவல் டெஸ்டில் திரில் வெற்றி: தொடரை சமன் செய்தது இந்தியா
-
ஓவல் டெஸ்ட்: இந்தியா வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்