உறுப்பினர் சேர்க்கையில் ஓடிபிக்கு தடை: திமுகவின் மனு தள்ளுபடி

14


புதுடில்லி: ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் முன்னிட்டு, பொதுமக்களிடம் மொபைல் போனில் ஓடிபி எண் பெறுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, 'ஓரணியில் தமிழகம்' என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வந்த தி.மு.க.,வினர், பொதுமக்களிடமிருந்து ஆதார் ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை கடவுச் சொல்லை பெற்று வந்தனர்.


இதற்கு எதிராக அ.தி.மு.க., நிர்வாகி ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உறுப்பினர் சேர்க்கையின் போது ஓ.டி.பி., பெற இடைக்கால தடை விதித்தனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தி.மு.க., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று (ஆகஸ்ட் 04) தள்ளுபடி செய்யப்பட்டது. ''உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை'' எனக் கூறி, நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement