ஸ்பெயினில் பாஸ்போர்ட், விசா திருட்டு; 48 மணிநேரம் திண்டாடிய இந்திய தொழிலதிபர்; நாடு திரும்பியது எப்படி?

புதுடில்லி: ஸ்பெயினில் தனது பாஸ்போர்ட், விசா திருடப்பட்டதால், 48 மணிநேரம் திண்டாடிய இந்திய இளம் தொழிலதிபர் இந்திய தூதரகத்தின் உதவியுடன் உடனே தாய் நாடு திரும்பியுள்ளார்.
இந்திய இளம் தொழிலதிபரான ஆயுஷ் பஞ்ச்மியா, தொழில் விஷயமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது, அவரது பாஸ்போர்ட், விசா, கிரெட் கார்டு மற்றும் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளனர். தனக்கு நேர்ந்த இந்த மோசமான அனுபவம் குறித்தும், மீண்டும் தாய்நாடு திரும்பியது எப்படி? என்பது பற்றியும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
அவரது எக்ஸ் தளப்பதிவில்; வேலை விஷயமாக பார்சிலோனாவுக்கு சென்றிருந்தேன். அப்போது, என்னுடைய பையை மேஜை மீது வைத்து விட்டு, வெளியே சென்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். என்னுடைய பயணங்களில் இதுபோன்று பலமுறை செய்துள்ளேன். ஆனால், இந்த முறை என்னுடைய பையை காணவில்லை. அதில் தான், எனது பாஸ்போர்ட், அமெரிக்க விசா, கிரெடிட் கார்டுகள், கொஞ்சம் பணம் என அனைத்தையும் வைத்திருந்தேன்.
உடனடியாக அருகே உள்ள ஸ்டார்பக்ஸ் ஊழியர்களை அணுகி சிசிடிவி காட்சிகளை காண்பிக்குமாறு கெஞ்சினேன். ஆனால், முடியவில்லை. பின்னர், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகாரை பதிவு செய்தேன். அப்போது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய 15 முதல் 20 நாட்கள் ஆகும் என்று போலீசார் கூறி விட்டனர். இதனைக் கேட்டு அதிர்ந்து போய் விட்டேன். ஏனெனில், நான் இரு தினங்களில் இந்தியாவுக்கு புறப்பட வேண்டும்.
அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால், இந்திய தூதரகமும் மூடியிருந்தது. திங்கட்கிழமை வரை காத்திருந்து, தூதரகம் திறந்தவுடன் நடந்ததை கூறினேன். உடனே, அவர்கள் வெறும் 4 முதல் 5 மணிநேரத்தில் தற்காலிக பாஸ்போட் வழங்கினர். அன்றைய தினமே இந்தியாவுக்கு புறப்பட்டு விட்டேன். எனக்கு உதவிய அதிகாரிகளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இப்போது நான் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
இதுபோன்ற நீங்களும் பாதிக்கப்பட்டால், பீதியடையாமல் இந்திய தூதகரத்தை அணுகி பயனடையுங்கள், எனக் கூறினார். அவரது இந்தப் பதிவை பார்க்கும் நெட்டிசன்கள், தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.










மேலும்
-
100% சிறப்பாக செயல்படும் 'நிசார்' செயற்கைக்கோள்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
-
கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம்; ஓபிஎஸ் கேள்விக்கு நயினார் பதில்
-
ராணுவத்தை இழிவுபடுத்துவதா: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம்
-
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: சென்னை ஐகோர்ட் வேதனை
-
ஓவல் டெஸ்டில் திரில் வெற்றி: தொடரை சமன் செய்தது இந்தியா
-
ஓவல் டெஸ்ட்: இந்தியா வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்