நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்: இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

1

சென்னை: நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.



இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது;


தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த மாவட்டங்கள் பின் வருமாறு;


தேனி


தென்காசி


தருமபுரி


கிருஷ்ணகிரி


சேலம்


கள்ளக்குறிச்சி


திருவண்ணாமலை


திருப்பத்தூர்


வேலூர்


விழுப்புரம்


ராணிப்பேட்டை


*கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.


* கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


* தென்காசி, தேனியில் நாளை (ஆக.5) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.


* திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை(ஆக.5) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement