பா.ஜ., கூட்டணிக்கு வரவேற்பு: நாகேந்திரன்

விருதுநகர்: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் பேட்டி:

தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் இணையப் போவதாக வரும் செய்திகளுக்கு நாங்கள் என்ன கருத்து சொல்ல முடியும்? அவர் என்ன முடிவெடுத்தாலும், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஓட்டு குறையாது.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து சென்ற பின், பா.ஜ., கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் எண்ணத்துக்கு, தமிழக மக்கள் தேர்தலில் பரிசளிப்பர்.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த போது, அ.தி.மு.க., பழனிசாமி நிறைய நல்ல விஷயங்களை செய்திருக்கிறார்; திட்டங்களும் நிறைய நிறைவேற்றப்பட்டுள்ளன.

மத்திய -- மாநில அரசு ஒருமித்து செயல்பட்டால், மாநில அரசு வளமானதாக மாறும் என்பதற்கு கடந்த கால அ.தி.மு.க., ஆட்சியே சாட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement