மனைவியை கொன்று நாடகம் கணவனுக்கு 'காப்பு'

மல்லசமுத்திரம்: மனைவியை கொன்று நாடகமாடிய, போதை கணவனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே மேட்டுப்பாளையம், சத்யா நகரைச் சேர்ந்தவர் தனபால், 44; கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா, 33. தம்பதிக்கு 8, 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட போது, ஆத்திரத்தில் கீதாவின் கழுத்தை நெரித்து தனபால் கொலை செய்துள்ளார். அக்கம்பக்கத்தினரிடம், கீதா துாக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறியுள்ளார். சகோதரி சாவில் சந்தேகம் உள்ளதாக, கீதாவின் அக்கா மல்லசமுத்திரம் போலீசில் புகாரளித்தார்.

பிரேத பரிசோதனையில், கீதா கொலை செய்யப்பட்டது உறுதியானது. போலீசார், தனபாலை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement