சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்: சத்குரு

10


கோவை: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வழி நடத்திய, 'குருவின் மடியில்' என்ற தியான நிகழ்ச்சி, கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது.

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின், தேவார பண்ணிசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. சத்குரு வழிநடத்திய, சக்திவாய்ந்த தியான அமர்வுகள், அருளுரை ஆகியவை இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது: ஒரு மொழி நீண்ட காலத்திற்கு இருக்க வேண்டும் என்றால், அதனைச் சுற்றியுள்ள கலாசார அம்சங்களை, உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

தமிழ் மொழியின் பெருமை நம் நெஞ்சில் இருந்தால், தமிழ் கலாசாரத்தில் ஆன்மிக தொண்டாற்றிய சித்தர்கள், யோகிகள், நாயன்மார்களின் பெயர்களை தமிழ் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்.



ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களும், அவர்களுக்குள் உருவாகும் கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், அன்பு, ஆனந்தம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும், தாங்களே பொறுப்பு என்பதை உணர வேண்டும்.


யோகா, தியானம் செய்வதற்கு எல்லாம் தற்போது நேரமில்லை என, மக்கள் தற்போது கூறுகிறார்கள். ஆனால், நம் நாட்டின் பிரதமரே தினமும் யோகப் பயிற்சி செய்கிறார். நாம் வெறும் ஏழு நிமிடங்களில் செய்யக்கூடிய, 'மிராக்கிள் ஆப் மைண்ட்' இலவச செயலியை பயன்படுத்தி, மனநலத்திற்காக தியானத்தை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


இந்நிகழ்ச்சி, தமிழ்நாட்டில், 112 இடங்களிலும், வெளிநாடுகளிலும் என, மொத்தம் 128 இடங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

Advertisement