காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும்; பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் பிரதமர் தீவிரம்

ஜெருசலேம்: 'பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' என ராணுவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டு உள்ளார்.
காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர போர் நடக்கிறது. ஹமாஸ் படையினர் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். பிணைக் கைதிகளை மீட்க தான் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போரை துவங்கியது. 250 பிணைக்கைதிகளில் பலர் இறந்து விட்டனர். பலர் மீட்கப்பட்டனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் வசம் இருக்கின்றனர்.
அவர்களை மொத்தமாக விடுவித்தால் போரை நிறுத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பிணைக்கைதி ஒருவர் தனது புதைகுழியை தோண்டும் அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டு ஹமாஸ் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:
பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். புதிய உத்தரவைப் பின்பற்ற வேண்டும்.
பிணைக்கைதி புதைகுழி தோண்டும் வீடியோவை வெளியிட்டதை பார்க்கும்போது, ஹமாஸ் என்ன விரும்புகிறது என்பதை நான் சரியாகப் புரிந்துகொள்கிறேன். அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை விரும்பவில்லை.
இந்த திகில் வீடியோக்களைப் பயன்படுத்தி எங்களை வேதனையடைய செய்ய விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் ராணுவத்திற்கு உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.


மேலும்
-
உலகளாவிய விரிவாக்கத்தை ஊக்குவிக்க ஜோய் ஆலுக்காஸ் -- எமிரேட்ஸ் என்.பி.டி., ஒப்பந்தம்
-
தன்வந்திரி பெருமாள் கோவில் திருப்பணிக்கு உதவ வேண்டுகோள்
-
அரசின் திட்டங்களில் தனிநபர் பெயர் இடம் பெறுவதை ஏற்க முடியாது: தே.மு.தி.க., பிரேமலதா உறுதி
-
தங்க நகை வியாபாரியிடம் 1.5 கிலோ தங்கம் வழிப்பறி
-
டில்லியில் பிலிப்பைன்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு; ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு
-
மீண்டும் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியது; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு