சாலையில் மண்டை ஓடு பழனியில் மக்கள் அச்சம்

பழனி: பழனி அடிவாரம் பகுதியில், மூன்று ரோடு சந்திக்கும் இடத்தில் மண்டையோடுடன் எலும்பு கூடு வைத்து பூஜை செய்திருந்ததால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி, அம்பேத்கர் தெரு, தில்லையாடி வள்ளியம்மை தெரு, போகர் சாலை ஆகியவற்றில் நெருக்கமாக வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, மூன்று தெருக்களும் சந்திக்கும் பகுதியில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் இருந்தன.

காலையில் இதை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், எலும்பு, மண்டை ஓட்டினை அப்புறப்படுத்தினர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சில நாட்களுக்கு முன், இதே போல இப்பகுதியில் பொம்மை, எலுமிச்சைப்பழம், பூ போன்றவை வைத்து பூஜை செய்யப்பட்டிருந்தது. குப்பை எடுக்கும் நபர்கள் அவற்றை அப்புறப்படுத்தினர். இதுபோன்று அடிக்கடி இப்பகுதியில் நடப்பதால் நடமாட அச்சமாக உள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement