தற்கொலைக்கு துாண்டியதாக இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

உளுந்துார்பேட்டை: முன்னாள் ஊராட்சி தலைவரை தற்கொலைக்கு துாண்டியதாக, இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த அத்திப்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் நயினா, 65. இவரது தம்பி பன்னீர்செல்வம் இறந்து விட்டார். குடும்ப சொத்து, 37 ஏக்கர் நிலத்தில் நயினா விவசாயம் செய்தார்.
பன்னீர்செல்வம் மனைவி சரிதா, 45, கணவருக்கு சேர வேண்டிய பாகத்தை பிரித்து தர நயினாவிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்னையில், இரு நாட்களுக்கு முன், நயினா தன்னை மானபங்கப்படுத்தியதாக போலீசில் சரிதா புகார் அளித்தார். திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா, கடந்த 2ல், நயினாவிடம் விசாரித்தார்.
நேற்று காலை நயினா, விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அவர் பாக்கெட்டில் இருந்த கடிதத்தில், 'என் தற்கொலைக்கு சரிதா, அவரது கூட்டாளிகள், இனஸ்பெக்டர் ஆகியோர் தான் காரணம்' என, எழுதி இருந்தார்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் உட்பட ஏழு பேர் மீது தற்கொலைக்கு துாண்டி யதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும்
-
நாமகிரிப்பேட்டையில் விபரீதம்; 3 மகள்களை கொன்று தந்தை தற்கொலை
-
ஐகோர்ட் உத்தரவால் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்... ஒரு நாள் தள்ளிவைப்பு! முதல்வர் தலைமையில் இன்று மீண்டும் பேச்சு நடக்குமா?
-
சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்: சத்குரு
-
டில்லி செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது
-
பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் காலமானார்; திரையுலகம் கண்ணீர் அஞ்சலி
-
காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிரக்க வேண்டும்; பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் பிரதமர் தீவிரம்