கொளத்தூர் பயணம் புது வலிமையை தந்தது: முதல்வர் ஸ்டாலின்

14

சென்னை: உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலிமையைப் பெற்றேன் இன்று!
இன்றைய கொளத்தூர் பயணத்தில், கிளாம்பாக்கம் கருணாநிதி நூற்றாண்டு பஸ் முனையத்தில், ரூ.18.26 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள போலீஸ் ஸ்டேஷன்,
பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.9.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து,

கொளத்தூரில் புதிய காவல் துணை கமிஷனர் அலுவலகம், பெரவள்ளூர் போலீஸ் ஸ்டேஷன், சட்டம் ஒழுங்குப் பிரிவு, போக்குவரத்துக் காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக் கட்டடம், ரெட்டேரியில் AC பஸ் நிறுத்தம் என, ரூ.17.65 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.

நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement