ஆனந்துார் பள்ளி வளைவில் சென்டர் மீடியன் வேண்டும்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆனந்துார் அரசுப் பள்ளி வளைவில் விபத்துக்களை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துாரில் இருந்து தேவகோட்டை செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் ஆனந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் உள்ள வளைவு ரோட்டில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத வகையில் விபத்துக்கள் தொடர்கின்றன.
இதனால் பள்ளி மாணவர்களும், அவ்வழியாக செல்லும் பொதுமக்களும் தினமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதனால், அப்பகுதியில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் விதமாக பள்ளி வளைவு ரோட்டில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் விபத்துகளில் சிக்காத வகையில் சென்டர் மீடியன் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தினர்.
மேலும்
-
ஆசிய சர்பிங் போட்டியில் அசத்தும் வீராங்கனைகள்...
-
மும்பையில் நெட்வொர்க் பிரச்னை : ஏர் இந்தியா விமான விமான சேவை பாதிப்பு
-
சின்சினாட்டி டென்னிஸ்: கார்சியா வெற்றி
-
ஆக., 15ல் புடினை சந்திக்கிறார் டிரம்ப்; உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுக்காது என்கிறார் ஜெலென்ஸ்கி
-
காஷ்மீருக்கு முதல் முறையாக சரக்கு ரயில் சேவை ; பிரதமர் பெருமிதம்
-
தேர்தல் வெற்றிக்காக தரப்படும் இலவசங்கள்: யோசித்து செயல்பட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை