விலகுகிறாரா சஞ்சு சாம்சன்: ராஜஸ்தான் அணியில் இருந்து

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகலாம்.

இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் 30. கேரளாவை சேர்ந்த இவர், பிரிமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த சீசனில் சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, 9வது இடம் பிடித்து ஏமாற்றியது. இத்தொடரின் நிறைய போட்டிகளில் காயம் காரணமாக சாம்சன் விளையாடவில்லை. ரியான் பராக் அணியை வழிநடத்தினார்.
இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கும், ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அடுத்த சீசனில், ராஜஸ்தான் அணியில் இருந்து விலகி, சென்னை அணிக்காக சாம்சன் விளையாட இருப்பதாக தகவல் வெளியானது. வீரர்கள் ஏலத்திற்கு முன், 'டிரேடிங்' முறையில் இவரை சென்னை அணிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக துபே அல்லது அஷ்வினை வாங்க ராஜஸ்தான் அணி முடிவு செய்துள்ளது.

Advertisement