ஆகஸ்ட் மாத பவுர்ணமிக்கு இன்னொரு பெயர் மீன் நிலவு!

1

புதுடில்லி: ஆகஸ்ட் 9ல் வரும் பவுர்ணமி முழு நிலவு, மீன் நிலவு என்று அழைக்கப்படுகிறது.


ஆகஸ்டில் வரும் முழு நிலவான ஸ்டர்ஜன் மூன் ( மீன் நிலவு), 2025ம் ஆண்டில் இரண்டு இரவுகள் கொண்ட ஒரு சிறப்பு நிகழ்வாக இருக்கும்.
ஆகஸ்ட் 9 சனிக்கிழமை காலை அதன் உச்சத்தை எட்டும். இது, 2025ம் ஆண்டில் மிகவும் கண்கவர் இரவாக இருக்கும். பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமிக்க மற்றும் அரிய 2 இரவு முழு நிலவு வாய்ப்பை அளிக்கிறது.


மேலும் இந்த ஆண்டு, இந்த முழு நிலவு ரக்ஷா பந்தன் பண்டிகையுடன் ஒத்துப்போகிறது, இது இந்தியாவில் ஒரு கலாசார முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாத முழு நிலவை எப்போது பார்க்க வேண்டும்?
ஆகஸ்ட் 9, அன்று அதிகாலை 3:55 மணிக்கு (ஐஎஸ்டி நேரப்படி பிற்பகல் 1:25) ஸ்டர்ஜன் நிலவு அதன் உச்சத்தை அடையும்.

வடக்கு அரைக்கோளத்திலிருந்து சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற விரும்பும் மக்கள், ஆகஸ்ட் 8, மற்றும் ஆகஸ்ட் 9, இரண்டு நாட்களிலும் மாலைகளில் வானத்தைப் பார்க்கலாம்.

இரண்டு இரவுகளிலும் சூரிய அஸ்தமனத்தைச் சுற்றி முழுநிலவு உதயமாகும். இது அடிவானத்திற்கு அருகில் பெரியதாக தோன்றுவதால் ஒரு அற்புதமான காட்சியை வழங்கும்.

இது ஏன் ஸ்டர்ஜன் நிலவு என்று அழைக்கப்படுகிறது?
வட அமெரிக்காவின் கிரேட் லேக்ஸ் பகுதியில் உள்ள பூர்வீக அமெரிக்க பழங்குடியினர் இதை மீன் நிலவு என்று அழைத்தனர்.

பெரிய ஸ்டர்ஜன் மீன்கள் மிக எளிதாக கிடைத்த பவுர்ணமி தினம் என்பதால் பழங்குடியினர் இவ்வாறு அழைத்ததாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

Advertisement